மும்பையில் தனது மூன்று மகள்களையும் அளவற்ற அன்புடனும், அர்ப்பணிப்புடனும் வளர்த்து ஆளாக்கிய ஒரு வியாபாரியின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது. அவர்கள் மூவருக்கும் உயர்கல்வி வழங்கி, ஆடம்பரமாக விமர்சையாகத் திருமணமும் செய்து வைத்த அந்தத் தந்தை, தனது இறுதிக்காலத்தில் எந்தவித ஆதரவும் இன்றித் தவித்துள்ளார்.
யாரும் அரவணைக்க இல்லாத நிலையில், அவர் தனது கடைசி நாட்களை ஒரு முதியோர் இல்லத்தில் கழித்து அங்கேயே பரிதாபமாகக் காலமானார். பெத்து வளர்த்த தந்தை உயிரிழந்த நிலையிலும், அவரது மூன்று மகள்களும் நேரில் வந்து அவரது உடலைப் பார்க்கக்கூட முன்வரவில்லை என்பது அனைவரையும் உலுக்கியுள்ளது.
அவரது மறைவுக்குப் பிறகு, அந்த மூன்று மகள்களும் காணொளி அழைப்பு (Video Call) மூலமாக மட்டுமே தந்தையின் உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டு, இறுதி மரியாதையை முடித்துக் கொண்டுள்ளனர். பெத்த தந்தையின் இறுதிச் சடங்கைக் கூட நேரில் வந்து செய்யாத அவர்களின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ காலில் முடிந்த சோகம் 🤬🤬🤬🤬🤬🤬
எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது 💯🤬
மும்பையில் 3 மகள்களை அன்புடனும், அர்ப்பணிப்புடனும் வளர்த்து, உயர்கல்வி படிக்க வைத்து, விமர்சையாகத் திருமணமும் செய்து வைத்த ஒரு வியாபாரி, தனது இறுதிக்காலத்தில் ஆதரவின்றி முதியோர் இல்லத்தில்… pic.twitter.com/ihIkgYukW6
— yuva💞 (@yuvanya_) August 7, 2026
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளின் இத்தகைய போக்கு குறித்துப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களையும் சோகத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
