பொதுவாகக் கொடிய விஷமுள்ள நாகப்பாம்பைக் கண்டாலே மனிதர்கள் அலறியடித்து ஓடும் நிலையில், விவசாயப் பணியின் போது எதிர்பாராதவிதமாகத் சிக்கிய பெரிய கோப்ரா பாம்பை லாவகமாகப் பிடித்துத் தனது கழுத்தைச் சுற்றிக் கொண்ட ஒரு நபரின் காணொளி தற்போது இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அருகில் நின்றவர்களிடம் தன் செல்போனைக் கொடுத்து அந்தத் ஆபத்தான தருணத்தைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கச் சொல்லி அவர் காட்டிய அலட்சியம் பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Gondala Mallesh (@gondalamallesh)

அந்தப் பயங்கரமான நாகப்பாம்பு மீண்டும் மீண்டும் தன்னைத் தாக்க முயன்று புசுவென்று சீறிய போதிலும், அந்த நபர் சிறிதும் அச்சமின்றி அதைச் சமாளித்து விநோதமான சாகசங்களில் ஈடுபட்டுள்ளார். பாம்பு எந்நேரமும் தன் மீது பாய்ந்து கடித்துவிடுமோ என்ற ஆபத்தான சூழல் நிலவிய போதிலும், அவர் துளியும் பயப்படாமல் தொடர்ந்து அந்தப் பாம்பைக் கையாண்ட விதம் அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வைரல் வீடியோவைக் கண்டு ஷாக்காகியுள்ள நெட்டிசன்கள், இதுபோன்ற ஆபத்தான மற்றும் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதை உணராமல், லைக்ஸ்காக மக்கள் உயிரைப் பணயம் வைக்கும் இத்தகைய போக்கு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.