நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், அவரது இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தக் காணொளியில் பேசிய இளைஞர், “தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் 8 தலித் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் வன்னியரசு மட்டுமே தலித்துகளுக்காகப் பணி செய்வதாகவும், மற்றவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் பா.ரஞ்சித் அபாண்டமாகப் பேசுகிறார். வன்னியரசுவுக்கு ஒதுக்கப்பட்டது சமூக நீதித் துறை என்பதால் அவர் அதற்கான வேலையைச் செய்கிறார்; மற்ற அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை சார்ந்த பணிகளைச் செய்கிறார்கள். இதைக் கூடப் புரிந்துகொள்ளாமல் பேசுவது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்த அவர், “சாதி, மதம், பணத்தை வைத்து நடத்தப்பட்ட அரசியல் அமைப்பை உடைத்தது மிகப்பெரிய மாற்றம் இல்லையா? 60-க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று கூறியபோதோ, கவின் கொலை வழக்கில் குற்றவாளி 10 மாதங்கள் கைதாகாமல் இருந்தபோதோ நீங்கள் வாயில் கொழுக்கட்டையா வைத்திருந்தீர்கள்? சாதிய காரணங்களால் பல கிராமங்களுக்குப் பேருந்து வசதி மறுக்கப்பட்டபோது எங்கே இருந்தீர்கள்? சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தீர்களா?” எனக் காட்டமாக வினவினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தவெக ஆட்சி அமைந்த பிறகே இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளது. நல்லது நடக்கும்போது பேசாமல், கேள்வி மட்டுமே கேட்பேன் என்பது என்ன நியாயம்? கேள்வி கேட்கலாம், ஆனால் அதை கேட்க வேண்டிய ஒன்றிய அரசிடம் கேட்க வேண்டும்; அதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சரிடம் கேட்பது ஏன்? ஜனநாயகன் படத்திற்கும் மாணவர்களின் நீட் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என்று கேட்டார்.
நான் என்னென்ன கேக்கணும்னு நினைச்சேனோ, அதெல்லாம் இந்த தம்பியே கேட்டுட்டாரு. Thanks, தம்பி @ramk8060
இதுக்கு உன்கிட்ட பதில் இருக்கா? @beemji
Next கொத்தடிமை மீட்டிங்க்ல answer பண்ண ready-ஆ prepare பண்ணிக்கோ. pic.twitter.com/BEjJ2gJUxw
— ShArun Vijay🇪🇸🐿 (@Arun37929513) July 24, 2026
”கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்த நீட் ரகசியம் என்று கூறி உதயநிதி ஏமாற்றியபோது பா.ரஞ்சித் அமைதியாக இருந்தார். திமுகவின் இந்தத் திசைதிருப்பும் போராட்டத்திற்குப் பின்னணியில் இருக்கும் இவர்களது ஒரே நோக்கம் ஆட்சியைப் பலவீனப்படுத்துவதுதான். எனவே தலித் மக்கள் இத்தகைய போலி குற்றச்சாட்டுகளை நிச்சயமாக நம்பக் கூடாது” என்று அந்த இளைஞர் தனது காணொளியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
