மலையாள நடிகர் தியான் சீனிவாசன் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்து கண்கலங்கிய நிகழ்வை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில், “தான் முதல்வராகும் போது நவ்யா நாயர் பட்டுப்புடவை கட்டி வந்து முதல் வரிசையில் அமர்ந்து கண்ணீர் விட வேண்டும்” என்று அவர் பேசியது சர்ச்சையானது.

இத்தகைய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், த்ரிஷா வழக்கம்போல எதற்கும் விளக்கம் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

மாறாக, இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் மஞ்சள் நிற உடையில் இருக்கும் செல்ஃபி, புத்தகம் வாசிக்கும் தருணம், பிடித்த உணவுகள் மற்றும் காபி என தனது அன்றாட மகிழ்ச்சியான தருணங்களை “Blissful me days” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

திரைத்துறையில் தன்னைச் சுற்றிப் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்தாலும், த்ரிஷா அவற்றை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய்யின் குடும்ப விவகாரங்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்து பதிவுகள் குறித்தும் எழுந்த விவாதங்களுக்குப் பதிலளிக்காமல் அமைதி காத்த த்ரிஷா, தற்போதைய சர்ச்சைக்கு தனது இந்த ஸ்டைலான பதிவின் மூலம் “எவர் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை” என்ற செய்தியை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

இத்தகைய சர்ச்சைகளைத் தனது அலட்சியத்தால் கடந்து செல்வது த்ரிஷாவின் வழக்கமான பாணியாகவே உள்ளது என்றும், இதுவே அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.