தமிழக முதலமைச்சர் விஜய், அரசு நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் தனது அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கும் மிகக் கடுமையான எச்சரிக்கையையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.

“இந்த ஐந்தாண்டு கால ஆட்சியைக் கடந்து செல்வதற்காக நான் இங்கே வரவில்லை. மக்கள் என் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், அவர்களுக்காகத் தொடர்ந்து உழைக்கவே நான் பதவியேற்றுள்ளேன்.

நான் எவ்வாறு நேர்மையாகவும், மக்கள் பணியிலும் அர்ப்பணிப்புடன் இருக்கிறேனோ, அதே பாதையைத்தான் நீங்களும் பின்பற்ற வேண்டும்,” என்று அமைச்சர்களை நோக்கி அவர் காட்டமாகக் கேட்டுக்கொண்டார்.

மேலும், வெறும் மேடைப் பேச்சுகளால் மட்டும் ஆட்சியை நடத்திவிட முடியாது என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “நமது அரசு முற்றிலும் ஊழலற்ற, தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

“>

 

மக்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும்போது, அதிகாரிகள் அவர்களிடம் லஞ்சம் பெறாமல், அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனுக்குடன் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும். இதில் எந்தவிதமான சமரசமும் இருக்கக் கூடாது,” என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.