சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காகப் பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்கள் எடுக்கும் கலாச்சாரம் தற்போது இளைஞர்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒரு இளம்பெண் கோவில் நுழைவாயிலின் முன்பு நின்றுகொண்டு நடனமாடி ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளார்.
இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மை குறித்தப் பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், அந்தப் பெண் கோவில் முன்பு நடனமாடுவதைக் கண்டதும் உடனடியாக அவரை நோக்கி வந்து தடுத்து நிறுத்தினார்.
Making reels or dancing inside temples and within temple premises should be strictly prohibited, irrespective of who is doing it.
Temples are places of worship, not content creation studios. The govt and temple authorities must take stringent action against those who disrespect… pic.twitter.com/F8hiAhElaX
— Mr Sinha (@Mrsinha) July 15, 2026
“>
மேலும் “இது போன்ற வீடியோக்கள் எடுப்பதற்கும், நடனமாடுவதற்கும் இது சரியான இடம் அல்ல” என்று கூறி அந்தப் பெண்ணை அங்கிருந்து எச்சரித்து அனுப்பினார். காவலரின் இந்தச் சமயோசிதமான மற்றும் கண்டிப்பான நடவடிக்கை அங்கிருந்தப் பிற பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும், ஆன்மீகத் தலங்களின் அமைதியையும் புனிதத்தையும் கெடுக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது என்று தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், கடமையைச் சரியாகச் செய்த அந்தக் காவலருக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
