சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பலதரப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது நெஞ்சை பதறவைக்கும் வகையிலான ஒரு பைக் சாகச வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வலது கை உடைந்த நிலையிலும், ஒருவர் சாலையில் மிகச் சாதாரணமாக பைக்கை ஓட்டிச் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

பொதுவாக இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது இரண்டு கைகளின் கட்டுப்பாடும் மிகவும் அவசியமாகும். ஆனால், இந்த வைரல் வீடியோவில் இருக்கும் நபருக்கு வலது கை உடைந்த நிலையில் செயலிழந்து காணப்படுகிறது. இருப்பினும், அவர் சற்றும் யோசிக்காமல் தனது இடது கையை குறுக்காகக் கொண்டு சென்று, பைக்கின் வலது பக்க ஹேண்டிலை பிடித்து வாகனத்தை இயக்கி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

பைக்கை தங்களது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் பலரும் தடுமாறும் நிலையில், இந்த நபர் மாற்று வழியில் பைக்கை பேலன்ஸ் செய்து ஓட்டிய விதம் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. இந்த அசாதாரணமான காட்சியை சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் வேளையில், இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகின்றன. ஒரு சிலர் அவரது பேலன்சிங் திறமையைக் கண்டு வியந்தாலும், பெரும்பாலான சமூக வலைத்தளப் பயனர்கள் இது மிகவும் ஆபத்தானது என்றும், பொதுச் சாலையில் மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பொறுப்பற்ற செயல் என்றும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.