நாகரிகமான மனிதர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், அதுவும் படித்த உயர் பதவிகளில் இருக்கும் இருவர், ஒரு குறுகிய லிஃப்ட்டிற்குள் புகுந்து தெருச்சந்தை ரேஞ்சிற்கு ஒருவரையொருவர் காலால் உதைத்துத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
பார்ப்பவர்களையே முகம் சுளிக்க வைக்கும் இந்த மோதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உயர்தர அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பிரல்ஹாத் குமார் மற்றும் தீபக் சோப்ரா ஆகிய இருவரும் அந்த குடியிருப்பின் அடுக்குமாடி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் முக்கிய நிர்வாகிகளாகப் பதவி வகித்தவர்கள் ஆவார்.
சங்கப் பணிகள் மற்றும் இதர நிர்வாகப் பொறுப்புகள் தொடர்பாக இவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாகவே கடும் கருத்து வேறுபாடுகளும், புகைச்சல்களும் இருந்து வந்துள்ளன. இந்த நிலையில், புதன்கிழமை காலை இவர்கள் இருவரும் தற்செயலாக அதே குடியிருப்பில் உள்ள மின்தூக்கி ஒன்றில் ஏறியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் இருந்த பழைய பகை காரணமாக ஒரு சிறிய அற்பமான விஷயம் குறித்து வாக்குவாதம் வெடித்துள்ளது. லிஃப்ட் கீழே இறங்குவதற்குள் இருவருக்குள் இருந்த வாய்மொழித் தகராறு எல்லையைக் கடந்து முற்றியது.
ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற இருவரும் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். மின்தூக்கிக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின்படி, முதலில் ஒருவர் மற்றவரைத் தள்ள, அடுத்த நொடியே இருவரும் ஆக்ரோஷமாக மாறி, ஒருவரையொருவர் கால்களால் சரமாரியாக உடைத்தும், கைகளால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிச் சண்டையிட்டனர். லிஃப்ட் கதவு திறந்த பிறகும் இவர்களது வெறித்தனம் அடங்கவில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, காயமடைந்த தீபக் சோப்ரா உடனடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று பிரல்ஹாத் குமார் மீது அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.
गाझियाबाद येथील एका उच्चभ्रू सोसायटीत अपार्टमेंट ओनर्स असोसिएशनच्या (एओए) दोन माजी पदाधिकाऱ्यांमध्ये लिफ्टच्या आत जोरदार हाणामारी झाल्याची धक्कादायक घटना समोर आली आहे. pic.twitter.com/SoMNqMAnRY
— Saamana Online (@SaamanaOnline) July 16, 2026
“>
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். படித்தவர்களே இப்படி நடுத்தெருவில் சண்டை போடுவதைப் போல லிஃப்டிற்குள் உடைத்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
