சமூக வலைத்தளங்களில் திருமண வீடியோக்கள் வைரலாவது வாடிக்கைதான் என்றாலும், தற்போது பீகார் திருமண விழா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையவாசிகளின் வயிறு குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து, உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் முன்னிலையில், ஒருவர் டவுசர் மற்றும் பனியன் மட்டுமே அணிந்து வந்து செய்த லூட்டிதான் இந்த அதிரடி வைரலுக்குக் காரணம்.
பொதுவாக திருமண விழாக்களுக்கு வருபவர்கள் பட்டுப்புடவை, கோட் சூட் என தங்களை ஆடம்பரமாக அலங்கரித்துக் கொண்டு வருவதுதான் வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், திருமண மேடையில் புதுமணத் தம்பதியருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரிசையாக நின்று வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, திடீரென கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர் மேடையில் ஏறியதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
Wtaf??😭😭 pic.twitter.com/suMgBH6e5Q
— rareindianclips (@rareindianclips) July 15, 2026
அதற்குக் காரணம், அவர் சட்டையோ அல்லது வேட்டியோ அணியாமல், வெறும் உள்ளாடையுடன் மட்டுமே மேடைக்கு வந்திருந்தார். மேடைக்கு வந்தது மட்டுமன்றி, புது ஜோடிகளின் முன்னால் நின்று கொண்டு செம்ம மாஸாக கைதட்டி நடனமாடவும் தொடங்கினார். அங்கிருந்த கேமராமேன் இந்த விசித்திரமான காட்சியைத் தவறவிடாமல் அப்படியே தனது கேமராவில் பதிவு செய்தார்.
மணமக்களுக்கு மற்ற உறவினர்களைப் போல இந்த அங்கிளும் தலா 100 ரூபாய் மொய் பணத்தை ஆசீர்வாதமாக வழங்கினார். இவரது இந்த விசித்திரமான உடை மற்றும் துணிச்சலான நடனத்தைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த வீடியோவிற்கு கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். ஒரு பயனர், “ஏழை வீட்டுத் திருமணத்தில் தமாஷ் இல்லாமல் இருக்குமா?” என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, “ஜே பீகார்!” என அம்மாநிலத்தின் கலாச்சாரத்தைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகக் கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
