ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒட்டுமொத்த உலகையுமே அதிரவைக்கும் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில், வழக்கம் போல காலை வேளையில் இரண்டு பெண்கள் தங்களது வளர்ப்பு நாய்களுடன் நிம்மதியாக நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த ஒரு மர்ம நபர், யாருமே எதிர்பாராத விதமாக அந்த இரண்டு பெண்களுக்கும் பாலியல் ரீதியாக அத்துமீறி தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். பட்டப்பகலில், பொது இடத்தில் அரங்கேறிய இந்த கொடூரத் தாக்குதலால் அந்த பெண்கள் நிலைகுலைந்து போயினர்.
Pack of Dogs Brutally Chase Away Man After He Sexually Assaults Two Women on Morning Walk (WATCH) https://t.co/xOpVqJtwca
“>
ஆனால், அடுத்த சில நொடிகளில் அங்கு நடந்த ட்விஸ்ட் தான் தற்போதைய இணையதள ட்ரெண்டிங் தங்களது எஜமானிகளுக்கு ஆபத்து நேர்ந்ததை உணர்ந்த அந்த துணிச்சலான 8 வளர்ப்பு நாய்களும், ஒட்டுமொத்தமாக ஒரே கூட்டமாக அந்த காமுகனை நோக்கி வெறித்தனமாகப் பாய்ந்தன.
நாய்களின் இந்த அதிரடித் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர், பயத்தில் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய நாய் கூட்டத்தில் இருந்த ஒரு பெரிய ரக நாய், ஓடிய காமுகனின் இடது காலைக் கவ்விப் பிடித்து அவனது பேன்ட்டைக் கிழித்து எறிந்தது.
இதனால் வலியிலும் மரண பயத்திலும் கத்தியபடி, அந்த நபர் அங்கிருந்த மேம்பாலத்திற்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடித் தப்பினார். இந்த திக் திக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் அச்சுப்பிசகாமல் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடியோவில் பதிவாகியுள்ள கருப்பு நிற டிராக்சூட், சாம்பல் நிற ஹூடி, வெள்ளை சாக்ஸ் அணிந்து, முதுகில் பிரகாசமான நீல நிறப் பையைச் சுமந்தபடி தப்பியோடிய அந்த காமுகனைப் பிடிக்க போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். ஆபத்தான நேரத்தில் எஜமானிகளைக் காப்பாற்றிய அந்த 8 விசுவாசமான நாய்களுக்குப் பாராட்டுக்கள் குவிகிறது.
