திருமணத் தகவல் மையத்தை நடத்தி வரும் ஒன்ட்ரில்லா கபூர் என்ற மேட்ச்மேக்கர், தனது வாடிக்கையாளர் ஒருவரை நீக்கியது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

28 வயதான பிராமணப் பெண் ஒருவருக்கு வரன் தேடும் பணியை மேற்கொண்டிருந்தபோது, அவரது குடும்பத்தினர் மிக அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்ததாக கபூர் கூறுகிறார்.

அந்தப் பெண் ஆண்டுக்கு 11 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் பெங்காலி பிராமண மணமகனை மட்டுமே எதிர்பார்த்துள்ளனர்.

தகுதியான பல வரன்களை அறிமுகப்படுத்தியும், அனைத்தையும் அந்தப் பெண் மற்றும் அவரது தாயார் நிராகரித்ததால், மேட்ச்மேக்கர் கபூர் அந்த வாடிக்கையாளருடன் தனது சேவையைத் துண்டித்துக்கொண்டார்.

இந்த விவகாரத்தில், “கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆண்கள், இதுபோன்ற தேவையற்ற பிடிவாதத்தையும், குடும்பத்தினரின் அதிகப்படியான தலையீட்டையும் எளிதில் கண்டறிந்து விடுவார்கள்” என்று கபூர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திருமணச் சந்தையில் வரம்பு மீறிய எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்குச் சிக்கலை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் கலவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Oendrila Kapoor | MatchMaker and Dating Coach (@oendrila.kapoor)

“>

ஒரு தரப்பினர் பெண்ணின் குடும்பத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகம் என்று விமர்சித்தாலும், மற்றுமொரு தரப்பினர், திருமணப் பேச்சுவார்த்தையின் போது தனிப்பட்ட தகவல்களைச் சமூக வலைதளத்தில் பகிரும் மேட்ச்மேக்கரின் செயலைச் சுட்டிக்காட்டி அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.