உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரமான ரிஷிகேஷில், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த டெல்லியைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகளை அங்குள்ள வாகன நிறுத்துமிடப் பணியாளர் மற்றும் உள்ளூர் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சுற்றுலாப் பயணிகள், பணியாளரைத் தாக்கியதோடு உள்ளூர் மக்களிடமும் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் தங்களது கருப்பு நிற தார் காரில் தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது.
Delhi tourists in Rishikesh got drunk on their Thar, abused locals, stripped and behaved obscenely. When parking staff protested, they brutally assaulted them. Police arrested Tushar Mishra, Manish Singh, Ashish, Vicky & their friend Kajal; Thar seized. pic.twitter.com/68P0NDCF2d
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 13, 2026
“>
எனினும், இந்த அத்துமீறலில் ஈடுபட்ட டெல்லி சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனங்களை வலுவாகப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் “மலைப் பிரதேசங்களின் அமைதிக்கு டெல்லி சுற்றுலாப் பயணிகளே பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், புனித நகரமான ரிஷிகேஷைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை” என்றும் பலர் விமர்சித்துள்ளனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
