சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயலட்சுமி, மரியவில்சன் மற்றும் கமலி ஆகியோர் கலந்துகொண்டு, தங்கள் துறைகளின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்தனர்.
கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகள், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது.
அரசுத்துறைகளின் பணிகளை விரைவுபடுத்தவும், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் முதலமைச்சர் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
துறை சார்ந்த அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை, மாநிலத்தில் பால் வளம் மற்றும் கால்நடைத்துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
