ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே, அவர் வாங்க நினைத்த ₹898 மதிப்புள்ள முக்கியப் பொருள் ஸ்டாக் இல்லாததால் நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், மீதமிருந்த ₹5 சாக்லேட் மட்டும் ரத்து செய்யப்படாமல் டெலிவரிக்குத் தயாரானது.
இந்நிலையில் அடுத்த 10 நிமிடங்களில், இரண்டு டெலிவரி ஊழியர்கள் புன்னகையுடன் மோட்டார் சைக்கிளில் வந்து, வெறும் 5 ரூபாய் சாக்லேட்டை மட்டும் ஆர்டர் செய்த அந்த “வித்தியாசமான” வாடிக்கையாளரைப் பார்க்கவே நேரில் வந்ததாகக் கூறி அவரிடம் ஒப்படைத்தனர். இந்த நகைச்சுவையான மற்றும் சுவாரசியமான கதையை அவர் தனது லிங்க்டின் பக்கத்தில் பகிர, அது தற்போது இணையத்தில் பலரையும் சிரிக்க வைத்து வைரலாகி வருகிறது.
