இந்தியாவின் புகழ்பெற்ற உணவு நிறுவனமான ஹல்திராம்ஸ் தனது முதலாவது கிளையை லண்டனின் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உணவுகளை வாங்குவதற்காகப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் முண்டியடித்துக் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
views.we.explore என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “லண்டனில் உள்ள ஒவ்வொரு இந்தியரின் வீக்கெண்ட் பிளானும் இதுதான்” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ள அந்த வைரல் வீடியோவில், நூற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் காட்சிகள் லண்டன் நகரையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் வேளையில், “லண்டனில் சோலே பட்டூ ரேவுக்காக இவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் நடப்பதா” என்று பலரும் வியந்து பாராட்டினாலும், மற்றொருதரப்பினர், “அங்கு பிரோசன் உணவுகளைத்தான் அதிக விலைக்கு விற்கிறார்கள், காசுக்கு இது வர்த்தே இல்லை” என்று தங்களது கடுமையான விமர்சனங்களையும் இணையத்தை பகிரப்பட்டு வருகின்றனர்.
