இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களின் மீதான மோகம் மனிதர்களின் உணர்வுகளையும், மனிதாபிமானத்தையும் எந்த அளவிற்கு மழுங்கடித்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் கணவர் ஒருவர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மிகக் கடுமையான சூழலிலும், அவரது மனைவி சிறிதும் கவலையின்றி அருகில் நின்றுகொண்டு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தயாரிப்பதில் மூழ்கியுள்ளார். லைக்ஸ்களும் வியூஸ்களும் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து, மருத்துவமனையின் தீவிரத்தையயோ அல்லது தன் கணவனின் வலியையோ உணராமல் அந்தப் பெண் செய்துள்ள இந்தச் செயல் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் சுயநலமான மற்றும் பொறுப்பற்ற நடத்தையைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “வியூஸ் வாங்குவதற்காக மனிதர்கள் தங்களின் சுய அறிவையும், குறைந்தபட்ச மனிதநேயத்தையும் கூட இழந்துவிட்டார்களா?” என்று பலரும் தங்களது கோபத்தையும் ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உறவுகளின் வலியை விடச் சமூக ஊடகங்களின் லைக்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஆபத்தான கலாச்சாரம், தற்காலத் தலைமுறையினரின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் கூறிப் பலரும் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
