பெங்களூரு சுங்கடகட்டே பகுதியில், திருமணமாகி வெறும் நான்கே மாதங்கள் ஆன நிலையில், 25 வயது இளம்பெண் ஒருவர் தனது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்துள்ள மரணக் குறிப்பு பார்ப்போரின் நெஞ்சைக் கரைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலையின் பின்னணியில் வரதட்சணை கொடுமையோ அல்லது கணவன் மற்றும் புகுந்த வீட்டாரின் கடுமையான மன உளைச்சலோ இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் கணவரை போலீஸார் அதிரடியாகப் பிடித்து தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.