“எடப்பாடி பழனிசாமியை காலி பண்ணுவேன்னு சொல்லித்தானே டிடிவி தினகரன் தனியா கட்சி ஆரம்பிச்சாரு, இன்னைக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவுல விட்டுட்டு யாரை துரோகினு சொன்னாரோ அவங்களுடனே போய் கூட்டணி வெச்சிருக்காரே.. இவரெல்லாம் பேசாம இருக்குறதுதான் நல்லது!”

என்று தவெக அரசை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசிய பேச்சுக்கு அமைச்சர் நிர்மல்குமார் மிகக் கடுமையான தொனியில் பளீச்சென்று பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதாகக் கூறி கட்சி தொடங்கிவிட்டு, தற்போது தங்களின் சுயநலத்திற்காகத் தொண்டர்களின் வாழ்க்கையோடு விளையாடி, பழைய துரோகிகளுடனேயே கைகோர்த்துள்ள தினகரனின் அரசியல் இரட்டை வேடத்தை அப்பட்டமாகத் தோலுரித்துள்ளார்;

அடுத்தவர்களை விமர்சிப்பதற்கு முன்னால் தினகரன் தனது கடந்த கால அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும், கொஞ்ச நாளைக்கு அவர் வாயைத் திறக்காமல் அமைதியாக இருப்பதே அவருக்கு நல்லது என்றும் காரசாரமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.