அரசியல் சூழ்நிலை யாரை வேணாலும் எப்ப வேணாலும் ஒன்னு சேர்க்கும் .. அண்ணாவும் ராஜாஜியும் சேர்ந்த மாதிரி அரிய கூட்டணியெல்லாம் நம்ம ஊர்ல நடந்திருக்கு, அதனால திமுகவும் அதிமுகவும் ஒன்னா சேர்றதுல எந்தத் தப்பும் இல்லையே!”

என்று திமுக – அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பளீச்சென்று சிரித்துக் கொண்டே பதிலை அளித்துள்ளார். தவெக தலைவர் விஜய் இந்தத் தேர்தலில் 35 சதவீத வாக்குகள் பெற்று, 108 இடங்களை வென்று பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அவரை வீழ்த்துவதற்காக மற்ற கட்சிகள் வியூகம் வகுப்பதில் தவறில்லை என்றும், திமுக கூட்டணியில் இருப்பவர்களை இழுத்து தவெக தன் அமைச்சரவையில் இடமளிப்பது நியாயமென்றால், எந்தவொரு கூட்டணியும் நியாயமே என்றும் அவர் காரசாரமாக விளக்கியுள்ளார்.