சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,06,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14509 ரூபாய்க்கும், ஒரு சவரன் 116072 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.