தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (X) தளத்தில் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “தமிழகம் முழுவதும் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்துவோம்;
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து… pic.twitter.com/2rc1EOYHLs
— K.Annamalai (@annamalai_k) July 10, 2026
இதற்காக மக்கள் நேரடியாகவோ அல்லது ‘WE THE LEADERS’ அமைப்பின் மூலமாகவோ மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்போம்; மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம்; மாறுவோம், மாற்றுவோம்!” என்று தமிழக மக்களுக்கு அதிரடி அழைப்பு விடுத்துள்ளார். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அண்ணாமலை கையில் எடுத்துள்ள இந்த புதிய மூவ், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
