திரைப்படங்களில் கூட பார்க்க முடியாத ஒரு விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நள்ளிரவில் திருடும் நோக்கத்தில் ஒரு கட்டடத்தின் மீது ஏறிய திருடன் ஒருவன், எதிர்பாராதவிதமாக இறங்கவும் முடியாமல், ஏறவும் முடியாமல் பாதியிலேயே சிக்கிக் கொண்டுள்ளான். விடிந்ததும் அதை கவனித்த அந்தப் பகுதி மக்கள், ஆத்திரப்பட்டு அவனை அடித்து துவம்சம் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கு நடந்ததோ முற்றிலும் தலைகீழான ஒரு மனிதாபிமானக் கூத்து! உயிருக்கு பயந்து நடுங்கிக் கொண்டிருந்த அந்த திருடனை, உள்ளூர் மக்கள் பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
கீழே கொண்டு வந்த பிறகு, அவன் பசியால் வாடிப் போயிருப்பதை உணர்ந்த மக்கள், அவனுக்கு வயிறார நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்து உபசரித்துள்ளனர். அதுமட்டுமன்றி, “இனிமேல் இந்த மாதிரி தப்பான வழிக்கு போகாதே, திருடுறதை விட்டுட்டு உழைத்து வாழப் பாரு தம்பி” என்று பாசத்தோடு அட்வைஸ் மழையும் பொழிந்துள்ளனர். கடைசியில், அவன் பத்திரமாக ஊர் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அவனது கையில் டாக்ஸி கட்டணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். அடி வெளுக்க வேண்டிய திருடனுக்கு, அன்பால் அட்வைஸ் செய்து அனுப்பிய இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது!
