பெற்றோர்கள் நெஞ்சையே பதற வைக்கக்கூடிய ஒரு அதிர்ச்சிச் சம்பவம், இப்போது ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கி எடுத்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள பிரபல ‘நீரஜா மோடி’ பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி அமைரா குமார் மீனா, சக மாணவர்களின் கடுமையான ‘புல்லிங்’ (வார்த்தை மற்றும் உடல் ரீதியான வதவதப்பு) காரணமாக மரணமடைந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சிபிஎஸ்இ (CBSE) நடத்திய முதற்கட்ட விசாரணையில், நெஞ்சை உலுக்கும் பல பகீர் உண்மைகள் வெளிவந்துள்ளன.
அந்த 9 வயது சிறுமி, கிட்டத்தட்ட 18 மாதங்களாகப் பள்ளியில் சக மாணவர்களால் கடுமையான கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளார். ”என்னை எல்லாரும் கொடுமைப்படுத்துறாங்க, காப்பாத்துங்க!” என்று அந்தச் சிறுமி அழுதுகொண்டே தன் கிளாஸ் டீச்சரிடம் பலமுறை முறையிட்டுள்ளார். சம்பவத்தன்று கூட பலமுறை ஓடிப் போய் உதவி கேட்டும், அந்த ஆசிரியை அதைக் காதில் வாங்காமல், “அதெல்லாம் அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போ” என்று அலட்சியமாகத் துரத்திவிட்டுள்ளார்.
பள்ளியின் இந்த அலட்சியமும், புல்லிங் தடுப்பு முறைகள் இல்லாததுமே அந்தப் பிஞ்சு உயிர் பறிபோகக் காரணம் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது போலீஸார் பள்ளியின் உரிமையாளர், முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிள்ளைகள் சொல்லும் புகார்களைப் பள்ளிகள் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை பாடம்!
