உத்தரப் பிரதேச மாநிலம் ஒருதலைக் காதலால் அரங்கேறியுள்ள கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழும் ரதி என்ற பெண்ணிடம், அவரது உறவினர் முறையிலான விராஜ் என்ற வாலிபர் ஒருதலைக் காதலை வலியுறுத்தி வந்துள்ளார்.

அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த மே 30-ஆம் தேதி ரதியின் 18 மாதக் குழந்தையான ஆரவை சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி விராஜ் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.

தெருவில் சென்றவுடன் குழந்தையின் இரு கால்களையும் பிடித்து, சிமெண்ட் சாலையில் அடுத்தடுத்து 8 முறை தலைகீழாகத் தூக்கிப் போட்டு கொடூரமாகக் கொன்றுள்ளார். பின்னர் விளையாடும்போது விழுந்துவிட்டதாகப் பொய் கூறிவிட்டுத் தப்பியோடினார்.

அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதையடுத்து தப்பியோட முயன்ற விராஜை போலீசார் என்கவுண்டர் பாணியில் காலில் சுட்டுப் பிடித்தனர்.

இந்தக் கொடூர வழக்கின்  அந்தப் பயங்கரக் காட்சிகளைப் பார்த்ததும், அதுவரை குற்றத்தை மறுத்து வந்த கொலையாளி விராஜ், நீதிமன்றத்திலேயே கதறி அழுது தனது தலையை முட்டிக்கொண்டார்.

விடுமுறை நாட்கள் போக வெறும் 30 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த அதிவேக நீதிமன்ற விசாரணையின் முடிவில், விராஜ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த கொடூரத்திற்கு அந்தப் பாவிக்குத் தூக்குத் தண்டனை மட்டுமே கிடைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.