தற்போது எக்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வரும் ஒரு பதைபதைக்க வைக்கும் வீடியோ, ரயில்வே நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு லோக்கல் ரயில் தண்டவாளத்தில் மிக மெதுவாக முன்னோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக, கையில் ஒரு பெரிய கல்லுடன் பெண் ஒருவர் நேருக்கு நேராக ரயிலை நோக்கித் தண்டவாளத்தில் நடந்து வருகிறார்.
अब इनका क्या किया जाए 😵💫
रेलवे की परेशानी बढ़ती जा रही है इंसान को अपने जीवन की
चिंता नहीं कम से कम और लोगों को परेशानी में डालना नहीं
चाहिए जीवन को इतना सस्ता समझते हैं यकीन नहीं होता है pic.twitter.com/HJtiaEhxfr— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) July 8, 2026
பெண் தண்டவாளத்தில் நிற்பதைக் கண்ட லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்), சமயோசிதமாகச் செயல்பட்டு ரயிலை உடனடியாக அங்கேயே நிறுத்தியுள்ளார்.
ரயில் நின்றதும் அந்தப் பெண் தண்டவாளத்தை விட்டு சற்று விலகிச் சென்றாலும், அடுத்த சில நொடக்ளிலேயே தான் கையில் வைத்திருந்த பெரிய கல்லைத் திடீரென அந்த ரயிலின் மீது ஆவேசமாக வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடுகிறார்.
இந்தப் பெண் யார், எதற்காக ரயிலை மறித்துக் கல் வீசினார், மற்றும் இந்தச் சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்ற அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
எனினும், இந்த ஆபத்தான வீடியோவைக் கண்டு அந்தப் பெண்ணின் மனநிலை குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தும் வைரலாக்கி வருகின்றனர்.
