தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளுநரின் சமீபத்திய நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, மதுரையில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ஆளுநர், வைகை ஆற்றின் நிலை குறித்துக் கவலை தெரிவித்ததுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையருடன் நீர்நிலைகள் பராமரிப்பு, சட்டம்-ஒழுங்கு, போதை ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஆட்சி அமைந்த இரண்டு மாதங்களிலேயே ஆளுநர் நிர்வாக விவகாரங்களில் தலையிட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆளுநரிடம் வழங்கப்பட்டஉறுதியை மீறி தற்போது “குதிரை பேரம்” நடைபெறுவதாகவும்.
சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, ஆவின் பால் தட்டுப்பாடு போன்ற பல பிரச்சனைகள் தொடருமானால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவை மத்திய ஆட்சி அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
