அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலில், இரு நபர்கள் பொது இடமிருந்து பாராமல் பெண்கள் மற்றும் சக பயணிகள் முன்னிலையில் பகிரங்கமாக மது அருந்தியும், சிகரெட் பிடித்துப் புகையும் ஊதியம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் இந்த அராஜகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணி ஒருவர், தனது மொபைல் கேமராவில் இதைப் படம் பிடிக்கத் தொடங்கியுள்ளார். அதைப்பார்த்த போதைஆசாமிகளிடம் ஒருவன், நிலைதடுமாறியபடி கேமராவை நோக்கி, “முதல்ல வீடியோவை ஆஃப் பண்ணுடா” என ஆத்திரத்துடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

  1. “>

அந்த மிரட்டலையும் மீறி பயணி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய அந்த இரு நபர்கள் மீதும் ரயில்வே போலீசார் இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.