மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் கேட் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைபவ் மற்றும் பூர்வா ஆகிய இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமண சடங்குகள் தொடங்கவிருந்த மிக முக்கியமான தருணத்தில், அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருமண மண்டபத்தின் தரைப்பகுதி முழுவதும் சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் மழைநீர் தேங்கி, ஒட்டுமொத்த இடமும் ஒரு குளம் போல காட்சியளித்தது. அப்போது மணமகள் பூர்வா, கனமான திருமண ஆடை மற்றும் ஆபரணங்களை அணிந்திருந்ததால், அந்த வெள்ள நீரில் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by THE ADULT SOCIETY (@adultsociety)

இதனைப் பார்த்த மணமகன் வைபவ் சற்றும் யோசிக்காமல், தேங்கி நின்ற வெள்ள நீரில் இறங்கி, தனது மணமகளை அப்படியே கைகளில் தூக்கிக்கொண்டு கவனமாக நடந்து சென்று பத்திரமாக திருமண மேடையில் இறக்கிவிட்டார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைக் கண்ட அங்கிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, இதனைத் தங்களது மொபைல் போன்களிலும் பதிவு செய்தனர். இயற்கை சீற்றத்தால் திருமணத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்ட போதிலும், மணமக்கள் இருவரும் சற்றும் மனம் தளராமல் மழையிலும், தண்ணீருக்கு மத்தியிலும் தங்களது திருமண சடங்குகளை அதாவது ஏழு சுற்றுகள் சுற்றி மகிழ்ச்சியோடு நடத்தி முடித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்து, பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.