ஒவ்வொரு மனிதனுக்கும் தங்களின் கனவு இல்லத்தை தங்களுக்குப் பிடித்தமான டிசைனில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஆனால், அதையெல்லாம் தாண்டி கேமரா மீதான தனது அதீத காதலால் அச்சு அசலாக ஒரு பிரம்மாண்ட கேமரா வடிவத்திலேயே வீடு கட்டி, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
ரவி ஹோங்கல் என்ற புகைப்படக் கலைஞர் பிரபல கண்டென்ட் கிரியேட்டர் பிரியம் சரஸ்வத் என்பவர் இந்த விசித்திர வீட்டிற்கு நேரில் சென்று ரவி ஹோங்கலுடன் இணைந்து நடத்திய முழு ஹோம் டூர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரவி வருகிறது.
சுமார் 71 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இந்த வீட்டின் உள்ளே நுழைந்ததும், ரவி தனது 30 வருட கேரியரில் பயன்படுத்திய அரிய வகை பழைய கேமராக்கள் மற்றும் லென்ஸ்கள் ஒரு பெரிய கபாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வீட்டின் சமையலறை ஜன்னல் வெளியே பார்க்கும்போது கேமரா லென்ஸ் போன்றது, பால்கனி கம்பிகள் பழைய காலத்து ஃபிலிம் ரோல் போன்றவை, சுவர்கள் எஸ்டி கார்டு வடிவிலும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
வீட்டின் கெஸ்ட் ரூம் ‘கூகுள் போட்டோஸ்’ தீமிலும், ஒவ்வொரு படிக்கட்டுகளிலும்
போட்டோகிராபி குறித்த அழகான மெசேஜ்களும் எழுதப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் உச்சகட்டமாக, ரவி ஹோங்கல் தனது கேமரா காதலால் தனது மூன்று மகன்களுக்கும் உலகின் புகழ்பெற்ற கேமரா மற்றும் பிரிண்டர் நிறுவனங்களான ‘கேனான்’ ‘நிகான்’ மற்றும் ‘எப்சன்’ எனப் பெயரிட்டு ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
View this post on Instagram
“>
தற்பொழுது அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரு முக்கிய ‘செல்பீ பாய்ண்ட்டாக’ மாறியுள்ள இந்த விசித்திர வீட்டின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பரவி வருகிறது.
