மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த கனமழையால், திருமண மண்டபம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிய நிலையிலும், மணமகன் தனது மணமகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு சடங்குகளை நடத்திய நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்தூரில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வந்ததால், நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சுமார் ஒன்றரை முதல் இரண்டு அடி வரை தண்ணீர் தேங்கியது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பூர்வா மற்றும் வைபவ் ஆகிய இந்த ஜோடி தங்களது திருமணத்தை நிறுத்த விரும்பவில்லை. மண்டபத்தில் விருந்தினர்கள் ஆடைகளைச் சுருட்டிக் கொண்டு தண்ணீரில் நடந்து செல்ல, காலணிகள் தண்ணீரில் மிதந்த நிலையிலும், தம்பதியினர் தங்களது திருமணச் சடங்குகளைத் தொடர்ந்தனர்.
इंदौर में बारिश से मैरिज गार्डन में भरा पानी, दूल्हे ने दुल्हन को गोदी में उठाया। ऐसे हुई शादी pic.twitter.com/9d3TBFOoHu
— SanjayGupta_Journalist (@sanjaygupta1304) July 7, 2026
“>
இந்நிலையில் மணமேடைக்கு மணமகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், மணமகன் வைபவ் தனது மணமகளை கைகளில் தூக்கிக்கொண்டு வெள்ள நீரில் நடந்து சென்று சடங்குகளை முடித்தார். திருமணம் முடிந்த பிறகும், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்குப் புன்னகையுடன் போஸ் கொடுத்தபடி, மணமகளைத் தூக்கிக்கொண்டே அவர் வெள்ள நீரைக் கடந்து சென்றார்.
இதனால் இணையத்தில் வைரலான இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், இதுதான் உண்மையான “மான்சூன் திருமணம்” என்று வேடிக்கையாகப் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், திருமண மண்டபத்தில் மின்சாரக் கம்பிகள் இருக்கும் என்பதால், தேங்கியுள்ள தண்ணீரில் இப்படி நடப்பது பாதுகாப்பற்றது என்றும் சிலர் தங்களின் கவலைகளையும் எச்சரிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
