பெண் குழந்தைகளுக்குச் சமூகம் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் தங்களை போன்ற ஆண் குழந்தைகளுக்கு நடக்கும் பாரபட்சம் குறித்துச் சிறுவன் ஒருவன் தனது ஆதங்கத்தைக் கொட்டி தீர்க்கும் க்யூட்டான வீடியோ இணையத்தில் பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கண்ணீருடன் பேசும் ஒரு சிறுவன், “அக்கா தம்பியை முட்டியாலோ அல்லது குத்தினாலோ, அவள் தெய்வத்தின் வடிவம் என்று கூறி சமூகம் சாதாரணமாகக் கடந்து போகிறது; ஆனால், அதே தம்பி திருப்பி அடித்தால் அப்பாவின் பெல்ட் பறந்து வருகிறது” என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளான்.
बड़े ही दुःख के साथ हँसना पड़ रहा है… 🤣🤣 pic.twitter.com/2Mmkmhxoth
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) July 5, 2026
தொடர்ந்து பேசிய அந்தச் சிறுவன், “அக்கா அழுதால் அவள் அப்பாவின் தேவதை, அதனால் அவள் அழலாம் என்கிறார்கள்; ஆனால், தம்பிகள் அழுதால் ‘ஆம்பளைங்க அழக் கூடாது, அவங்களுக்கு வலிக்காது’ என்று வீரம் பேசுகிறார்கள்” எனச் சமூகத்தின் இரட்டை நிலையை மழலை மாறாத மொழியில் விமர்சித்துள்ளான்.
