“நாங்க வாழணுமா? இல்ல சாகணுமா?” என்று தன் தந்தையின் குடிப்பழக்கத்தாலும் கந்துவட்டி கொடுமையாலும் நிலைகுலைந்த குடும்பத்தைக் காப்பாற்ற, சிறுவன் அஜய் கஜானன் நாகவ் அரசுக்கு விடுத்துள்ள கண்ணீர் கோரிக்கை இணையத்தை உலுக்கியுள்ளது. “எனக்கு நல்லா படிச்சு பெரிய ஆபீசர் ஆகணும் சார்” என்று லட்சியத்தோடு பேசும் இந்த சிறுவனின் தந்தை, குடிக்காக அதிக வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். தற்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டிற்கு வந்து அவனது தாயை மிரட்டி நரக வேதனை கொடுத்து வருகின்றனர்.

​இரண்டு இளம் தங்கைகளுடன், குடிகாரக் கணவனின் கடனையும் சுமந்து கொண்டு அந்தத் தாய் திக்கற்று நிற்கிறார். தன் குடும்பம் படும் அவலத்தைப் பார்த்து அந்தச் சிறுவன் எழுப்பிய இந்த மரண ஓலம் நெட்டிசன்களின் இதயத்தைக் கிழித்துள்ளது. மதுப்பழக்கம் குடிப்பவனை மட்டுமல்லாமல், ஒரு சிறுவனின் எதிர்காலத்தையே எப்படி சிதைக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. படித்துப் பெரிய ஆளாகத் துடிக்கும் இந்தச் சிறுவனுக்கு உடனடியாக அரசு உதவியும், ஆதரவும் கிடைக்க வேண்டும் என நெட்டிசன்கள் இந்த வீடியோவை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.