இந்தோனேசியாவில் பைக் டெலிவரி செய்யும் ஒரு இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகமும், அதன் பின் நடந்த நெகிழ்ச்சியான சம்பவமும் தான் இப்போது இணையத்தில் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அந்தப் பெண் தன் கைவசம் இருந்த கடைசிப் பணமான 470,000 இந்தோனேசிய ரூபாயை (சுமார் 100 சவுதி ரியால்) முதலீடு செய்து, வாடிக்கையாளர் கேட்ட உணவை ஹோட்டலில் இருந்து வாங்கியுள்ளார்.
ஆனால், பசியோடும் எதிர்பார்ப்போடும் அந்த உணவை டெலிவரி செய்ய வாடிக்கையாளரின் முகவரிக்குச் சென்றபோது, அந்தப் பெண்ணுக்கு இடி போன்ற ஒரு செய்தி காத்திருந்தது. அந்த வாடிக்கையாளர் ஈவு இரக்கமே இல்லாமல் திடீரென தனது ஆர்டரை ‘கேன்சல்’ செய்துவிட்டார். கையில் இருந்த கடைசிப் பணமும் போய்விட்டதே, இனி வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்று தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண் நடுரோட்டிலேயே அமர்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.
அவர் அழுதுகொண்டிருந்த அதே வேளையில், அந்த வழியாகச் சென்ற ஒரு நபர் அந்தப் பெண்ணின் பரிதாப நிலையைப் பார்த்து வண்டியை நிறுத்தியுள்ளார். அவரிடம் அழுதுகொண்டே அந்தப் பெண் நடந்த விஷயங்களைக் கூற, அதைக் கேட்டு உருகிப்போன அந்த நபர், சற்றும் யோசிக்காமல் அந்த உணவிற்கான முழுத் தொகையையும் தனது சொந்தப் பணத்தில் இருந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து உதவினார்.
شابة إندونيسية تشتغل مندوبة توصيل على دراجتها النارية، جاها طلب من أحد العملاء، وراحت للمطعم واشترت الأكل بقيمة 470 ألف روبية إندونيسية (حوالي 100 ريال سعودي) من حسابها الخاص، وكان هذا آخر مبلغ تملكه.
بعد ما وصلت إلى عنوان العميل، تفاجأت بأنه ألغى الطلب، فانهارت من الصدمة وما… https://t.co/bFkqC2C7G8 pic.twitter.com/DZVMx09xfA
— مــازن (@mazin2a) July 5, 2026
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒரு மோசமான சூழ்நிலை, ஒரு நல்ல மனிதரின் செயலால் நொடிப் பொழுதில் மனிதாபிமானத்தின் உச்சமாக மாறியது. பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த டெலிவரி பெண்ணின் முகத்தில் தெரிந்த நிம்மதியும், அவர் காட்டிய நெகிழ்ச்சியான ரியாக்ஷனும் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பார்ப்பவர்களை உருக வைத்து வருகிறது.
