இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணியின் இளம் அதிரடி புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டதால், சீனியர் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேன்செஸ்டரில் டாஸ் போடப்பட்ட பிறகு, சஞ்சு சாம்சன் அணியில் இல்லாத சூழலிலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சஞ்சுவை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து (Hug) சுமார் 31 வினாடிகள் உருக்கமாகப் பேசி ஆறுதல் கூறிய வீடியோ இப்போது எக்ஸ் தளத்தில் சும்மா காட்டுத்தீ போல பரவி வருகிறது.

டி20 உலகக் கோப்பை 2026-ல் தொடர்ந்து 97, 89 மற்றும் 89 ரன்கள் குவித்து இந்தியாவை உலக சாம்பியனாக்க முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன், கடந்த 3 இன்னிங்ஸ்களில் (4, 0, 1 ரன்கள்) தொடர்ந்து பிளாப் ஆனதால், வேறு வழியின்றி ஃபார்மில் இருக்கும் வைபவை சேர்க்க மேனேஜ்மென்ட் இந்த முடிவை எடுத்துள்ளது.

​அதேநேரம், சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் போன்ற இங்கிலாந்தின் அசுர வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களிலேயே சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தனது முதல் மேட்ச்லேயே செம கெத்து காட்டினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் ரன்னை ஸ்கொயர் லெக் திசையில் அடித்து கணக்கைத் தொடங்கிய வைபவ், வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கிரீஸை விட்டு வெளியே வந்தபோது, ஜோஸ் பட்லரால் சாதுரியமாக ஸ்டம்பிங் செய்யப்பட்டு 10 பந்துகளில் 14 ரன்களுக்கு அவுட் ஆனார்.

<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>As Vaibhav Suryavanshi replaced Sanju Samson, Gambhir was seen having a long &amp; animated chat with Samson. <a href=”https://t.co/OVR2FIJsGe”>pic.twitter.com/OVR2FIJsGe</a></p>&mdash; Varun (@Defending_18) <a href=”https://x.com/Defending_18/status/2073399320955728309?ref_src=twsrc%5Etfw”>July 4, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

வைபவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், 2015-ல் அறிமுகமாகியும் 11 வருடக் கெரியரில் வெறும் 65 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டு, எப்போதும் சஞ்சு சாம்சன் மீது மட்டுமே முதல் கத்தி பாய்வதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது குமுறல்களையும் ஆவேசத்தையும் கொட்டி தீர்த்து வருகின்றனர்.