உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் உள்ள சகஜான்வா சமூக சுகாதார மையத்தில், மருத்துவச் செலவுக்கான ரசீது கேட்ட இளைஞரை மருத்துவர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியிலேயே இத்தகைய அத்துமீறல் நடந்திருப்பது, சுகாதார மையங்களில் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவர்களின் அதிகாரப் போக்கு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒரு மருத்துவமனையிலேயே சேவைக்கு பதிலாக வன்முறை தலைவிரித்தாடுவது, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

“>

 

சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டிய ஒரு பகுதியில், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்களே இத்தகைய தடித்தனமான செயல்களில் ஈடுபடுவது, சாதாரண மக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.