ரயில் நிலையத்தில் நடந்த ஒரு நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தாய், தனது குழந்தையைக் கவனிக்காமல் ரயிலில் இருந்து தவறுதலாகக் கீழே இறங்கியுள்ளார்.
அவர் இறங்கிய சில நொடிகளிலேயே ரயிலும் வேகமெடுத்து நகரத் தொடங்கிவிட்டது. அதன் பின்னரே தனது குழந்தை ஓடும் ரயிலுக்குள் தனியாக இருப்பதை அந்தத் தாய் உணர்ந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் தவித்துள்ளார்.
அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர், வெளியில் அந்தத் தாய் கதறுவதைக் கண்டு சற்றும் யோசிக்காமல் உடனடியாகக் களத்தில் இறங்கினார். ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து பாய்ந்து கீழே இறங்கி, அந்தத் தாயிடம் குழந்தையைப் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.
அத்தோடு நின்றுவிடாமல், வேகம் பிடித்துக் கொண்டிருந்த அந்த ரயிலை நோக்கித் துரத்திச் சென்று, மீண்டும் ஓடும் ரயிலிலேயே மிக லாவகமாக ஏறித் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் சமயோசிதமாகச் செயல்பட்டு ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞரின் வீரச் செயல் தற்பொழுது இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், அந்த இளைஞரை ஒரு நிஜமான ‘சூப்பர் ஹீரோ’ என்று கொண்டாடி வருகின்றனர். “இந்தக் காலத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடவே மக்கள் யோசிக்கும் போது, ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகத் தன் உயிரையே பணையம் வைத்த இந்த இளைஞரின் மனிதநேயம் போற்றத்தக்கது” எனப் பலரும் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
