ஹரியானா மாநிலத்தில், திறந்த நிலையில் இருந்த 220 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன், 21 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீட்புக் குழுவினர் மிகுந்த சிரமப்பட்டு சிறுவனை மீட்டெடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் ரிஷி பால் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே சிறுவனின் இறப்பிற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் தொடர்ந்து பிஞ்சு உயிர்கள் பலியாவது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவனைப் பிணமாக மீட்டது, மீட்புக் குழுவினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

“>

இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கத் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடி வைப்பதையும், பாதுகாப்பை உறுதி செய்வதையும் அரசு மற்றும் பொதுமக்கள் மிகக் கவனமாகச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.