ன்று தேனி அருகே லாரியுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும்  வாகன ஓட்டிகள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும்  அதிர்ச்சி அலையையுமே கிளப்பியுள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கிப் பயணித்த அந்தச் சொகுசு கார், தேனி அருகே வந்து கொண்டிருந்த போது மதுரைக்குச் செல்வதற்கான சரியான மெயின் சாலையைக் காட்டாமல், பெரியகுளம் – வத்தலகுண்டு வழியாகச் செல்லும் ஒரு மாற்றுப் பாதையை  கூகுள் மேப் காட்டியுள்ளது.

மேப் காட்டிய அந்த மாற்று வழியிலேயே காரை ஓட்டிச் சென்ற போதுதான், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியுடன் கார் மிகக் கொடூரமாக நேருக்கு நேர் மோதி  நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் தனது உயிரை விட, மேலும் 3 பேர் மிகக் கடுமையான படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வந்துள்ளனர்;

அவர்கள் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அதிரடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த ஏரியா போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கூகுள் மேப் காட்டிய தவறான மாற்றுப் பாதையே இந்த விபத்துக்கு மிக முக்கியக் காரணம் என்பது  தெரியவந்துள்ளது எனப் போலிஸார் தெரிவித்துள்ள நிலையில், விபத்து குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது