மெட்ரோ ரயில் ஒன்றில் பயணித்த இளம்பெண் ஒருவர், எல்லோரையும் நடுங்க வைக்கும் டைட்டில் கொண்ட ஒரு புத்தகத்தை அசால்ட்டாகப் படித்துக் கொண்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வைரல் வீடியோவில், மெட்ரோ ரயில் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒரு இளம்பெண் தனது கையில் ஒரு பேக் மற்றும் புத்தகத்தை வைத்துக் கொண்டு மிகவும் நிதானமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பார்க்கும்போது எல்லாமே சாதாரணமாகத் தெரிந்தாலும், அந்த ரயிலில் இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் கேமராவை அந்தப் புத்தகத்தின் கவர் பக்கத்தின் மீது ‘ஜூம்’ (Zoom) செய்து பார்த்த போது தான் அதிர்ச்சியே காத்திருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Pranjul Srivastava (@pranjul.srivastava.7)

ஏனெனில், அந்தப் புத்தகத்தின் முகப்பில் “ஹவ் டு கில் ஏ மேன்” (How to Kill a Man) அதாவது “ஒரு ஆணை எப்படிக் கொலை செய்வது” என்கிற பகீர் டைட்டில் அச்சிடப்பட்டிருந்தது.

சமீபகாலமாகப் புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சியா, இந்தூரில் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் சிக்கிய அவரது மனைவி மற்றும் மீரட்டில் சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில் சிக்கிய அவரது மனைவி முஸ்கான் போன்ற பல ஹை-புரோஃபைல் கொலைச் சம்பவங்கள் நாடு முழுவதும் மெகா விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த மெட்ரோ ரயில் வீடியோவும் அதனுடன் இணைக்கப்பட்டுத் தற்பொழுது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், “இதைப் பார்த்ததும் ஒட்டுமொத்த ஆண்கள் சமூகத்துக்கே ஒரு நிமிடம் பயம் வந்துடுச்சு .. அடுத்த சோனமோ, சியாவோ அல்லது முஸ்கானோ இவங்களாத்தான் இருப்பாங்களோ?!” என்றும், “இப்படிப்பட்ட வன்முறையைத் தூண்டும் புத்தகங்களை தடை செய்ய வேண்டும்” என்றும் தங்களது  ஆதங்கத்தை அள்ளி வீசி வருகின்றனர்.