விண்ணைத் தொடும் உயரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை கடந்து செல்லும் காட்சிகள் பார்ப்போரைக் கண் இமைக்காமல் ரசிக்க வைக்கின்றன.
மேலும் பொறியியல் துறையின் மாபெரும் அதிசயமாகக் கருதப்படும் இந்தச் செனாப் பாலம், ஈபிள் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பனிப்பொழிவும் மேகக்கூட்டங்களும் சூழ்ந்த மலைகளுக்கு இடையே, கம்பீரமாக நிற்கும் இந்த வளைவுப் பாலத்தின் மேல் அதிநவீன வந்தே பாரத் ரயில் பயணிக்கும் காட்சிகள், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டத்தை உலகிற்குப் பறைசாற்றுகின்றன.
Breathtaking visuals of Vande Bharat Express crossing Chenab Bridge. 😍
Engineering Marvel. Enjoy the visuals. pic.twitter.com/IfLhJw4CSy
— Tathvam-asi (@tathvamasi6) June 30, 2026
“>
இந்தக் கண்கவர் பயணத்தின் பின்னணியில் இந்தியப் பொறியாளர்களின் வியக்கத்தக்க உழைப்பும், நவீன தொழில்நுட்பமும் அடங்கியுள்ளன. கடும் காற்று, நிலநடுக்கம் மற்றும் தீவிர வானிலை மாற்றங்களைத் தாங்கும் வகையில் மிகக் துல்லியமாகப் பார்த்துப் பார்த்துப் பார்த்து இந்தச் செனாப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் அத்தகையதொரு பிரம்மாண்டமான பாலத்தில், இந்தியாவின் பெருமைமிகு அதிவேக ரயிலான வந்தே பாரத் தடையின்றி சீறிப்பாய்ந்து செல்வது, காஷ்மீர் பள்ளத்தாக்கின் போக்குவரத்து இணைப்பில் ஒரு புதிய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இயற்கை அழகும் மனிதனின் அசாத்திய தொழில்நுட்பமும் ஒன்றிணைந்த இந்த அற்புதமான காட்சிகள், காண்பவர் நெஞ்சில் நீங்கா இடம்பிடிப்பதோடு, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.
