இன்ஸ்டாகிராமில் வாழ்க்கை முறை குறித்து வீடியோ வெளியிட்ட இந்திய வம்சாவளி தம்பதியான ஆஃப்ரின் மற்றும் நிஷ், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் எதிர்கொண்டனர்.
மேலும் அவர்கள் கடற்கரையில் நடனமாடும் அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் அவர்களைக் ‘குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள்’ என்று கேலி செய்தும், அவர்களின் உடல் தோற்றம் மற்றும் இனம் குறித்து நச்சுத்தனமான கருத்துக்களைப் பகிர்ந்தும் மிக மோசமாக விமர்சித்தனர்.
‘People called us infertile’: Indian-origin couple opens up after DINK video backlash https://t.co/wqZogUwbPT
“>
அதோடு தங்களின் வீடியோவின் தலைப்பு சிலருக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட இத்தம்பதியினர், “பெற்றோராக இருப்பதுதான் வாழ்க்கையின் ஆகச்சிறந்த மகிழ்ச்சி” என்று கூறும் பெற்றோர்களே தங்களின் மாறுபட்ட வாழ்க்கைப் பாதையை சகித்துக்கொள்ள முடியாமல் இணையத்தில் இவ்வளவு வெறுப்பைக் கொட்டியது தங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் குழந்தைகள் வேண்டாம் என்ற தங்களின் முடிவு வெறும் பணம் அல்லது சுற்றுலா செல்வதற்கான சுதந்திரம் சார்ந்தது மட்டுமல்ல, அது தங்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான கூடுதல் வாய்ப்புகளையும் மன அமைதியையும் வழங்குகிறது என்று இத்தம்பதியினர் விளக்குகின்றனர்.
இதன் மூலம் குழந்தைகளுக்கான பராமரிப்புச் செலவுகள், பணி இடைவேளைகள் போன்ற சிக்கல்கள் இல்லாமல் தங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் நிதி சார்ந்த முதலீடுகளில் தீவிர கவனம் செலுத்த முடிவதோடு, வயது முதிர்ந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளுக்கு முழுமையாகத் தங்களின் நேரத்தை ஒதுக்க முடிகிறது என்றும் கூறுகின்றனர்.
இதுகுறித்து அதே வேளையில், தங்களுக்கு வயதாகும் போது யார் கவனிப்பார்கள் என்ற சிந்தனை மற்றும் நண்பர்களிடமிருந்து ஏற்படும் சமூகத் தனிமை போன்ற சில சவால்கள் இந்த வாழ்க்கை முறையில் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை.
இருப்பினும், தங்களைப் போன்ற தம்பதியினரின் மகிழ்ச்சியான வாழ்க்கை சிலருக்கு இவ்வளவு கோபத்தை ஏற்படுத்துகிறது என்றால், அது மற்றவர்களின் மாறுபட்ட தேர்வைக் கண்டு அவர்கள் எவ்வளவு அச்சுறுத்தலாக உணர்கிறார்கள் என்பதையே காட்டுகிறது என்று கூறி, தங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கும் அவர்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
