கார் ஓட்டுநர் ஒருவர் சாலையோரம் இருந்த வியாபாரியின் தர்பூசணிப் பழங்கள் மீது தனது வாகனத்தை ஏற்றி நசுக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அய்ந்தின் பகுதியில் தர்பூசணி விற்றுக்கொண்டிருந்த வியாபாரிக்கும், அங்கு வந்த கார் ஓட்டுநருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல் முற்றியதைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.
Aydın’da iddiaya göre bir sürücü ile karpuz satan esnaf arasında henüz bilinmeyen bir nedenle tartışma çıktı.
Tartışmanın ardından sürücünün aracıyla esnafın tezgâhındaki karpuzların üzerinden geçtiği ve olay yerinden uzaklaştığı görüldü. pic.twitter.com/dO4pa6zIX7
— Metropol Haber (@metropolmedya_) June 30, 2026
“>
இதனால் சம்பவ இடத்தைச் சுற்றியிருந்தவர்கள் முன்னிலையில், அந்த ஓட்டுநர் தனது காரை நேராக தர்பூசணிப் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடையின் மீது வேகமாக ஏற்றியுள்ளார். இதில் கடையில் இருந்த ஏராளமான தர்பூசணிப் பழங்கள் காரின் சக்கரங்களில் சிக்கி நொறுங்கி நாசமாகின.
அதோடு வியாபாரியை அச்சுறுத்தும் வகையில் இந்தச் செயலைச் செய்த ஓட்டுநர், அடுத்த சில நொடிகளில் காரை நிறுத்தாமல் அங்கிருந்து அதிவேகமாக ஓட்டிச் சென்று தப்பியோடியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான மோதல் மற்றும் சேதத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைத் தேடும் பணியில் உள்ளூர் காவல்துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
