மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண் ஒருவர் ஆண்களைக் கொல்லும் வழி என்ற தலைப்பு கொண்ட புத்தகத்தைப் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 1.9 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சிலர் இதை வேடிக்கையான விஷயமாகப் பார்த்தாலும், இன்னும் சிலர் தற்போதைய சில குற்றச் சம்பவங்களுடன் இதனைத் தொடர்புபடுத்திப் பேசுவதால் இணையத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்தப் பெண் உண்மையிலேயே அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிக்கிறாரா அல்லது இது வெறும் கவனத்தை ஈர்க்கும் செயலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உண்மையில் இந்தப் புத்தகம் கேட்டி ப்ரெண்ட்  எழுதிய என்ற பிரபலமான ஒரு நாவலாகும்.

 

View this post on Instagram

 

A post shared by ꧁❤༆pankaj_sahni༆❤꧂ (@sahni_pankaj_3141)

“>

இது வன்முறையைத் தூண்டும் வழிகாட்டி அல்ல, மாறாக ஒரு திகில் மற்றும் நகைச்சுவை கலந்த புனைக்கதை மட்டுமே. எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்ணின் எண்ணங்களை அந்தத் தலைப்பை வைத்து முடிவெடுப்பது தவறானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.