அமெரிக்காவில் வசித்துவிட்டு இந்தியா திரும்பிய பெண் ஒருவர், நாடு திரும்பிய மூன்று மாதங்களுக்குப் பிறகும் தான் சந்திக்கும் சவால்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான் முன்பு இருந்த இந்தியாவுக்கும், இப்போதுள்ள இந்தியாவுக்கும் இடையிலான மாற்றத்தை உணர்வதாகவும், பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுகாதாரம் இல்லாமை மற்றும் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவது போன்ற விஷயங்கள் தனக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இந்தியா இப்படித்தான் இருக்கும்” என்று மற்றவர்கள் கூறுவதை ஏற்க முடியாமல், மாற்றத்தை விரும்புவதே தனக்கு வருத்தமளிப்பதாக அவர் தனது பதிவில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுக்குப் பலரும் ஆதரவும், அதே சமயம் மாற்றுக்கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து திரும்பிய பலரும் இதே போன்ற “ரிவர்ஸ் கல்ச்சர் ஷாக்” எனப்படும் கலாச்சார அதிர்வை உணர்வதாகத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
View this post on Instagram
“>
அதே நேரத்தில், இந்தியாவுக்குத் திரும்பியதில் இருக்கும் நேர்மறையான விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்றும், குறைகளை மட்டும் சொல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்தத் தன்னார்வத்துடன் செயல்பட வேண்டும் என்றும் சிலர் அவருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
சொந்த நாட்டிற்குத் திரும்பியதை வெறும் புகாராகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான முயற்சியாக மாற்ற வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
