விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு அப்பாவி சிறுமி நீர்க்காலில் விழுந்தார்; அங்கு பெற்றோரின் சில நிமிடங்களின் அலட்சியம் ஒரு மாபெரும் விபத்தாக மாறியிருக்கலாம், ஆனால் அங்கிருந்த ஒரு துணிச்சல் வாய்ந்த சிறுவன் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகத் தண்ணீரில் குதித்து, அந்தச் சிறுமியின் உயிரை மிக சாதுரியமாகக் காப்பாற்றியுள்ளார்.

குழந்தைகள் நீர்நிலைகளுக்கு அருகே விளையாடும்போது ஏற்படும் சில நிமிடக் கவனக்குறைவு எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்தும் இச்சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

“>

ஆபத்தான சூழலிலும் தனது உயிரைப் பற்றிக்கவலைப்படாமல் பாய்ந்து பச்சிளம் குழந்தையின் உயிரை மீட்ட அந்தச் சாமானிய சிறுவனின் அசாத்திய துணிச்சலைப் பாராட்டி இணையத்தில் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.