கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 19 வயது வாலிபரான தனுஷ், அதே வயதுடைய இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி தனுஷ் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் தனுஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கிற்கு எதிராக தனுஷ் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி, காதலித்து இருதரப்பு சம்மதத்துடன் உல்லாசமாக இருந்துவிட்டு, பின்னர் காதல் முறிந்தவுடன் அதனை ‘கற்பழிப்பு’ என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், வாலிபர் தனுஷ் மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.