பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் இலவசமாக மோமோஸ் (Momos) சாப்பிடக் கொடுத்து இளம் பெண்களைத் திட்டமிட்டுத் தனது காதல் வலையில் வீழ்த்தி, பின்னர் அவர்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து இணையத்தில் அப்லோடு செய்து பிளாக்மெயில் செய்த ‘மோமோஸ்’ கடைக்காரன் முகமது ரெய்ஹானின் கொடூர அராஜகம் சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையுமே கிளப்பியுள்ளது.
கயா மாவட்டத்தின் பாங்கேபஜார் காவல் எல்லைக்குட்பட்ட பாங்கேதாம் மலையில் உள்ள ஒரு புனிதமான ஆன்மீகத் தலத்தில் இந்த ஆபாச வீடியோக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது தான் இதில் உச்சகட்ட விபரீதம். இணையத்தில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வரும் 10 ஆபாச வீடியோக்களைக் கைப்பற்றியுள்ள போலீசார், அதில் ஒரே ஒரு வாலிபர் வெவ்வேறு பெண்களுடன் அசிங்கமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த மெகா கொடூரம் குறித்து கடந்த 15 நாட்களாகவே ஊருக்குள் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் காவல் நிலையத்தை அதிரடியாக முற்றுகையிட்டு உக்கிரப் போராட்டம் நடத்திய பிறகே போலீசார் விழித்துக்கொண்டு ஆக்ஷனில் இறங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக வீடியோவில் இருந்த ஒரு மைனர் சிறுமியைப் பத்திரமாக மீட்ட போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், சம்பவ இடத்திற்கு எஃப்எஸ்எல் (FSL) தடயவியல் நிபுணர்களை அனுப்பி டிஜிட்டல் ஆதாரங்களையும் அக்குவேறு ஆணிவேறாகச் சேகரித்துள்ளனர். தற்பொழுது காமுகன் முகமது ரெய்ஹான் மீது கற்பழிப்பு, போக்சோ (POCSO) சட்டம் மற்றும் எஸ்சி-எஸ்டி (SC-ST) வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் போலிஸ் கேஸ் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் மதமாற்றச் சதி ஏதேனும் உள்ளதா என்கிற கோணத்திலும் போலிஸ் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், எஃப்ஐஆர் (FIR) பதிவானதை அறிந்து டெல்லி, கயாவை விட்டு மும்பைக்கு எஸ்கேப் ஆகியுள்ள குற்றவாளி ரெய்ஹானை நடுரோட்டில் பிடிப்பதற்க்காக போலிஸ் தனிப்படை தற்பொழுது தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளது.
“ஃப்ரீயா வர்ற எதையும் நம்பக் கூடாது.. வியாபாரத்தை வச்சுக்கிட்டு இப்படி ஒரு புனிதமான இடத்துல இத்தனை பெண்களோட வாழ்க்கையைச் சீரழிச்ச இந்த அராஜகக்காரனுக்குச் சட்டப்படி ஆயுள் தண்டனை கன்பார்ம் ஆகணும்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் இணையத்தில் பயங்கர அனல் பறக்கும் கமெண்ட்டுகளுடன் இந்த நியூஸ் தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.
