சமூக வலைத்தளங்களில் பலவிதமான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், ஒரு இளம் பெண் படுக்கையில் தலையணையை அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு விசித்திரமான சீறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே படுக்கையை விட்டு அலறியடித்து எழுந்துள்ளார். ஆராய்ந்து பார்த்தபோது, அந்தப் பெண்ணின் படுக்கையில், தலையணைக்கு அடியில் ஒரு நச்சுப் பாம்பு ஒளிந்திருந்ததும், அதுவே அந்த சத்தத்தை எழுப்பியது என்பதும் தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் எந்தவித ஆபத்துமின்றி தப்பினார்.
तकिया पकड़ सोई थी लड़की, अचानक आने लगी हिसहिसाने की आवाज, हटाते ही पलंग से उछली! https://t.co/bdapYEnfFX
“>
இது குறிப்பாக இந்தியாவில் பருவமழைக் காலங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைவது மிகவும் சாதாரணமான விஷயமாக உள்ளது. எனவே, இது போன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிக்க, இரவில் தூங்குவதற்கு முன்பாக படுக்கை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை நன்றாகப் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் வீட்டைச் சுற்றி செடி, கொடிகள் அடர்ந்து வளராமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், தவறுதலாகப் பாம்புகள் தென்பட்டால் அவற்றை நாமே அடிக்க முற்படாமல், உடனடியாகப் பாம்பு பிடிக்கும் நிபுணர்களை அழைத்து அகற்ற வேண்டும் என்றும் இச்செய்தி எச்சரிக்கிறது.
