தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உரிய அனுமதியின்றி சிகிச்சைகளை ரீல்ஸ் மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே பதிவேற்றப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் விதிகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், மருத்துவமனைகளின்‌ அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த மருத்துவ மற்றும் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.