ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்வதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அந்த வீடியோவில், “நான் வீட்டைப் பெருக்குகிறேன், துடைக்கிறேன், பாத்திரங்களைக் கழுவுகிறேன்; இவ்வளவு செய்தும் என் மனைவி என்னை இன்னும் அடித்துத் துன்புறுத்துகிறார்” என்று அவர் அழுதுகொண்டே தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதோடு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், மனைவியின் குடும்பத்தினர் தன்னைத் தவறான வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டியதாகவும், இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே இந்தத் தீவிர முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
